ஊதா நிறத்தில் ஜொலிக்கும் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மின்னொலியில் ஜொலிக்கும் ஆட்சியர் அலுவலகம்
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தேனி ஆட்சியர் அலுவலகம் ஊதா நிற மின் விளக்கு தோரணங்களால் ஜொலிக்கிறது. மிளிரும் வண்ண அழகு காண்போர் கவனத்தை ஈர்த்து வருகிறது. மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் விதமாக ஐக்கிய நாடுகள் சபை கடந்த 1902 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ம் தேதியை சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாக அறிவித்தது. இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு பிறநாடுகளில் முக்கிய கட்டிடங்களில் "ஊதா" நிறத்தில் ஒளியூட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்தியாவில் முதல்முறையாக கடந்த ஆண்டு தமிழகத்திலும் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தமிழ அரசின் முக்கிய அலுவலக கட்டிடிங்கள் "ஊதா" நிற மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன. இரண்டாம் ஆண்டாக, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம் "ஊதா" நிற சீரியல் மின் விளக்குகளால் ஜொலிக்கிறது. இரவில் "ஊதா" வண்ணத்தில் மிளிரும் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் காண்போரின் கவனம் ஈர்த்து வருகிறது.