குஷ்புவை கண்டித்து தேனி திமுக மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

குஷ்புவை கண்டித்து தேனி திமுக மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மகளிர் உரிமைத் தொகையை குறித்து குஷ்பு கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


மகளிர் உரிமைத் தொகையை குறித்து குஷ்பு கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மகளிர் உரிமைத் தொகையை குறித்து தேசிய மகளிர் ஆணைய தலைவி குஷ்பு கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குஷ்புவின் கருத்திற்கு பாஜக தலைவர் அண்ணாமலை ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை என தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி? சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தேசிய மகளிர் ஆணைய தலைவி குஷ்பூ மகளிர் உரிமைத்தொகை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார், இதனைக் கண்டித்து தேனி மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் தேனி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு குஷ்புவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மகளிர் உரிமைத் தொகையை பெற்று வரும் தமிழ்நாட்டு மக்களை இழிவாகவும், கொச்சைப்படுத்தி பேசிய குஷ்பூவை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் பேசிய தங்க தமிழ்ச்செல்வன் குஷ்புவின் கருத்திற்கு தமிழ்நாட்டு பாஜக தலைவர் அண்ணாமலை ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பினார் இதில் திமுக மகளிர் அணியை சார்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர்

Tags

Next Story