தேனி : டிச.29ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
தேனியில் வரும் டிசம்பர் 29ம் தேதியன்று எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வருகிற 29ஆம் தேதி பிற்பகல் நான்கு மணி அளவில் ஆட்சித் தலைவர் தலைமையில் நுகர்வோர் எரிவாயு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் அமைப்பினர் தவறாமல் கலந்து கொண்டு தங்களது புகார் மனுக்கள் மீது தீர்வு பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Next Story