சர்வதேச கிக் பாக்ஸிங்கில் தேனி மாணவிகள் சாதனை

சர்வதேச கிக் பாக்ஸிங்கில் தேனி மாணவிகள் சாதனை

வரவேற்பு 

டெல்லியில் நடந்த சர்வதேச அளவிலான கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலப்பதக்கம் வென்று சாதித்த தேனி மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

சர்வதேச அளவிலான கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் 2024 ஆம் ஆண்டுக்கான போட்டி டெல்லியில் உள்ள இந்திராகாந்தி நினைவு உள் விளையாட்டு அரங்கத்தில் பிப்ரவரி மாதம் கடந்த 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடைபெற்றது இதில் இந்தியா உட்பட ஏராளமான நாடுகளில் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்று பல பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்கம் சார்பில் பங்கேற்ற தேனியைச் சேர்ந்த 10 வயது சிறுமி சம்ஷிதா இரண்டு பிரிவுகளில் தங்கம் மற்றும் வெண்கலம் பதக்கம் மற்றும் 12 வயது சிறுமி கிருபா ஸ்ரீ இரண்டு வெண்கல பதக்கமும் வென்று அசத்தியுள்ளனர்.

இந்நிலையில் பதக்கங்களை வென்று தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த சிறுமிகளுக்கு தேனி மாவட்ட அமைச்சூர் கிக் பாக்சிங் தலைவர் மகாராஜன் தலைமையில் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது பின்னர் இது குறித்து தேனி மாவட்ட அமைச்சூர் கிக் பாக்ஸிங் அசோசியேஷன் தலைவர் மகாராஜன் கூறுகையில் சிறுமிகள் பதக்கங்களை வென்று வந்தது பெருமை அளிக்கிறது என்றும் கிராமப்புறங்களில் இருக்கும் மாணவர்களுக்கு விளையாட்டு துறையில் ஈடுபடுத்த வேண்டும் என்ற நோக்கில் தேனி மாவட்ட கிக் பாக்ஸிங் அசோசியேசன் தொடங்கப்பட்டது தற்போது மாணவர்களின் இந்த வெற்றி மற்ற மாணவர்களுக்கும் விளையாட்டுத்துறையில் சாதிக்க தூண்டுதலாக இருக்கும் என்றும் பள்ளிகளில் இருந்தே மாணவர்களின் விளையாட்டு போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை சாதிக்க வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்

Tags

Next Story