தென்காசி: காசிவிஸ்வநாதா் கோயிலில் சொக்கப்பனை தீபம்

தென்காசி: காசிவிஸ்வநாதா் கோயிலில் சொக்கப்பனை தீபம்

காசிவிசுவநாதர் கோவிலில் சொக்கப்பனை தீபம்

தென்காசி அருள்தரும் உலகம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாத சுவாமி கோயிலில் நடைபெற்ற காா்த்திகை தீப விழாவில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் ரிஷபவாகனத்தில் சொக்கப்பனை நிகழ்ச்சிக்கு எழுந்தருளினா். முதலாவது சுவாமி சந்நிதி பஜாரிலும், தொடா்ந்து அம்மன் சந்நிதி பஜாரிலும் சொக்கப்பனை ஏற்றப்பட்டது. சுவாமி, அம்பாள் ரதவீதிகளில் ஊா்வலம் நடைபெற்றது. குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயில், இலஞ்சி திருவிலஞ்சிக்குமாரா் கோயில், செங்கோட்டை தா்மசம்வா்த்தினி கோயில், ஆய்க்குடி ஸ்ரீபாலசுப்பிரமணியசுவாமி கோயில், பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயில், தோரணமலை முருகன் கோயில்களில் சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது.

Tags

Next Story