தென்பெண்ணை - பாலாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்

தென்பெண்ணை - பாலாறு இணைப்பு திட்டத்தை  செயல்படுத்த வேண்டும்
 தென்பெண்ணை - பாலாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என செஞ்சி, நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
தென்பெண்ணை - பாலாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என செஞ்சி, நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கம் மற்றும் செஞ்சி ஊராட்சி ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் அனந்தபுரத்தில் நடைபெற்றது. இதற்கு செஞ்சி ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர் கள் கூட்டமைப்பு தலைவர் அணையேரி ரவி தலைமை தாங்கினார். நந்தன் கால்வாய் அமைப்பு செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் சுரேஷ், ஸ்ரீதர் ரெட்டியார், சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் அன்பழகன் வரவேற்றார். துணை செயலாளர் கார்த்திகேயன் சங்கத்தின் செயல்திட்டங்கள் குறித்து பேசினார். ஓய்வு பெற்ற ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குன ரும், நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்க ஒருங் கிணைப்பாளருமான அறவாழி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கூட்டத்தில் ரூ.309 கோடியில் தென்பெண்ணை பாலாறு நதிநீர் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்த தமிழக அரசு, இந்த பணியை உடனடியாக தொடங்க வேண்டும்.மேலும், நந்தன் கால்வாயை முறைப்படுத்தப்பட்ட கால்வாயாக அறிவித்து ஆண்டு தோறும் பராமரிப்பு பணிகளை செய்திடுதல், நந்தன் கால்வாய் ஷட்டவர்களை பாதுகாக்க நீர் காவலர்களை நியமிப்பது என்பது போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும் நீர் நிலைகளை தூர்வார முன்வரும் கிராமங்களுக்கு இலவசமாக கிட்டாச்சி எந்திரங்களை அனுப்பி வைக்க எக்ஸ்னோரா மற்றும் கைப்பா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதில், எக்ஸ்னோரா ஒருங்கிணைப்பாளர் சுப்பிர மணியன், மாநில கரும்பு விவசாயிகள் அணி பொதுச் செயலாளர் சக்திவேல், நீர்நிலைகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் வக்கீல் நெடுமாறன், செஞ்சி மனவள கலை மற்றும் பாலு கன்னிகா சாரிட்டபிள் டிரஸ்ட் ரமேஷ், விவசாயிகள் சங்கத் தலைவர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story