சின்னம்மன் கோவிலில் தெப்ப விழா
திருப்போரூர் அருகே சிறுதாவூர் சின்னமகோவிலில் நடந்த 16ம் ஆண்டு தெப்ப விழாவில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்போரூர் அடுத்த சிறுதாவூர் கிராமத்தில், பழமை வாய்ந்த சின்னம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 16ம் ஆண்டு தெப்பம் விழா, நடந்தது. விழாவில், நேற்று மாலை 5: 00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இரவு 9: 00 மணிக்கு மேளதாளங்கள் ஒலிக்க, கோவில் அருகே உள்ள பெரியகுளத்தில், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அம்மன் எழுந்தருளி, மூன்று முறை வலம் வந்தார். தொடர்ந்து, அம்மன் வீதியுலா நடைபெற்றது. விழாவில், சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர்.
Next Story