கீழ்வேளூர் அச்சலிங்க கோயிலில் தெப்ப திருவிழா:பக்தர்கள்  பங்கேற்பு

கீழ்வேளூர் அச்சலிங்க கோயிலில் தெப்ப திருவிழா:பக்தர்கள்  பங்கேற்பு

தெப்ப திருவிழாவில் பங்கேற்றவர்கள்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அச்சலிங்க சுவாமி கோயிலில் தெப்ப திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அச்சலிங்க சுவாமி கோயிலில் தெப்ப திருவிழா. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு. க நாகை மாவட்டம் கீழ்வேளூர் சுந்தர குஜாம்பிகை உடனுறை அச்சலிங்க சுவாமி கோயில் (கல்யாண சுந்தரர்) சித்திரை ஏக தின உற்சவ திருவிழா கடந்த 18ஆம் தேதி அனுக்ஞை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.

21ஆம் தேதி பஞ்ச மூர்த்திகள் படி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்று, 23ம் தேதி இரவு ஓலை சப்பரத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் மற்றும் வீதி உலா காட்சி நடைபெற்றது. 25ம் தேதி கல்யாணசுந்தரர் அம்பாள் சுவாமிகள் 7 ஊர் சிவன் கோயில்களுக்கு சப்தஸ்தான பல்லாக்கு வீதி உலா காட்சி நடைபெற்றது.

முக்கிய விழாவான தெப்பத் திருவிழா நேற்று இரவு கோயில் முன் உள்ள சரவண பொய்கை திருக்குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெற்றது. தெப்ப திருவிழாவிற்காக கோயில் குளத்திற்கு இரண்டு போர்வெல்கள் மூலம் சுமார் 4 நாட்கள் இரவு பகலாக தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று நிறைவு பெற்றது.

இதையடுத்து நேற்று இரவு சரவணப் பொய்கை திருக்குளத்தில் அமைக்கப்பட்ட தெப்பத்திற்கு கோயிலில் இருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கல்யாணசுந்தரர் அம்பாள் சுவாமிகள் தெப்பத்திற்கு எழுந்தருளினார். பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு குளத்தில் மூன்று முறை கல்யாணசுந்தரர் அம்பாள் சுற்றி வந்துபக்தர்களுக்கு அருள் பாலித்தார். தெப்பத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாளை 28ஆம் தேதி பஞ்ச மூர்த்திகள் பதாஸ்தான பிரவேசத்துடன் விழாவுடன் நிறைவு பெறுகிறு விழா ஏற்பாடுகளைசெயல் அலுவலர் பூமிநாதன், கோயில் பணியாளர்கள், உபதாரர்கள், கிராமவாசிகள் செய்திருந்தனர்

Tags

Next Story