சங்கரன்கோவிலில் தெப்ப உற்சவ திருவிழா
சங்கரன்கோவில் சங்கரலிங்க சுவாமி கோவிலில் நடந்த தை மாத தெப்ப உற்சவ திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரலிங்க சுவாமி கோவிலில் தை மாத தெப்பஉற்சவ திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோமதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்று ஸ்ரீ கோமதி அம்மன் சமேத ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் எழுந்தருளி ஆவுடைபொய்கை தெப்பத்தில் உலா வருதல் தொடர்ந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் நான்கு ரத வீதி உலா வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story