உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தெப்ப உற்சவம்
உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தெப்ப உற்சவம் நேற்று நடைபெற்றது.
உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் ஆண்டுதோறும் தெப்பத் திருவிழா 7 நாட்கள் நடைபெறும் இந்த ஆண்டு தெப்பத் திருவிழா கடந்த மாதம் 29ஆம் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்வான தெப்போற்சவம் நேற்று இரவு நடந்தது.
கோவில் குளத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த சிட்டு போன்ற தெப்பத்தில் நாச்சியார் எழுந்தருளினார். இரவு 7 மணி அளவில் தெப்ப வலம் துவங்கியது. இரவு 10:15 மணியளவில் மூலஸ்தானம் சேர்ந்தார்.
உறையூர் நாச்சியார் கோவில் தெப்பத் திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியான பந்த காட்சி இன்று இரவு நடைபெறுகிறது. உற்சவ நாச்சியார் இன்று மாலை புறப்பட்டு தெப்பம் மண்டபத்தில் திருவாராதனம் கண்டபின் பல்லக்கை புறப்பட்டு வீதி உலா வருவார்.
Next Story