திருச்செந்தூர் கோவிலில் தெப்ப உற்சவம்

திருச்செந்தூர் கோவிலில் தெப்ப உற்சவம்

தெப்ப உற்சவம் 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா 11-ம் நாளான நேற்று இரவு தெப்ப உற்சவம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா கடந்த மாதம் 14-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. திருவிழா காலங்களில் தினமும் காலை- மாலையில் சுவாமியும், அம்பாளும் வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். 11-ம் திருநாளான நேற்று மாலையில் சுவாமி குமரவிடங்கபெருமான், தெய்வானை அம்பாள் தனித்தனி சப்பரத்தில் எழுந்தருளி சன்னதி தெருவில் உள்ள யாதவர் மண்டபத்திற்கு சென்றனர். அங்கு சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி, அம்பாள் புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி வெளிவீதி வழியாக நெல்லை நகரத்தார் தெப்பக்குளம் மண்டபம் சேர்ந்தனர். அங்கு இரவு சுவாமி-அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடந்தது. பின்னர் வண்ண மலர்களாளும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு தெப்பத்தில் மிதந்து கொண்டு இருந்த தேரில் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாளுடன் எழுந்தருளினர். தெப்பத்தில் 11 முறை சுற்றும் தெப்ப உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

Tags

Next Story