தெப்பக்குளம் புனரமைப்பு பணிகள் துவக்கம்

தெப்பக்குளம் புனரமைப்பு பணிகள் துவக்கம்

துவக்க விழா 

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் திருக்கோவிலில் உள்ள தெப்பக்குள புனரமைப்பு பணிகள் தொடங்கியது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லி அம்மன் உடனுறை ஶ்ரீ பூவனநாதசுவாமி திருக்கோவிலில் உள்ள தெப்பக்குளம் அம்ரித் -2.0 திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சம் மதிப்பில் நகராட்சி மூலமாக புனரமைக்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

இந்த புனரமைப்பு பணி மூலமாக தெப்பக்குளத்தினை சுற்றி பேவர் பிளாக் சாலை, மின்விளக்கு வசதி மற்றும் சுற்றி மரங்கள், பூக்கள் வைக்கும் பணிகள் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் கருணாநிதி, நகராட்சி ஆணையர் கமலா, நகராட்சி சுகாதார அலுவலர் வெங்கடேஷ்,கோவில் அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் திருப்பதிராஜா, சண்முகராஜா, ரவீந்திரன், நிருத்தியலட்சுமி, கோவில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, நகர் மன்ற உறுப்பினர் விஜயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story