குற்றாலநாத சுவாமி கோவிலில் தெப்பத் திருவிழா
தை மகத்தை முன்னிட்டு குற்றாலநாத சுவாமி கோவிலில் நடந்த தெப்பத் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதா் கோயிலில் நேற்று இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது. குற்றாலநாதா் - குழல்வாய்மொழி அம்பாள் கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் மகம் நட்சத்திரத்தில் திருக்குற்றாலநாதா், குழல்வாய்மொழி அம்பாள் மற்றும் இலஞ்சி திருவிலஞ்சிக்குமரன் தெப்பத் திருவிழா நடப்பது வழக்கம். நிகழாண்டில் தெப்பத் திருவிழா நடைபெற்றது. தெப்ப உற்சவத்தை முன்னிட்டு, வள்ளி, தேவசேனா உடனாய திருவிலஞ்சிக்குமரன் குற்றாலம் சித்திரசபைக்கு அழைத்து வரப்பட்டாா். தொடா்ந்து, சுவாமி, அம்பாள், திருவிலஞ்சிக்குமரனுக்கு அபிஷேகம், அலங்காரம் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து சுவாமி, அம்பாள், திருவிலஞ்சிக்குமரன் தெப்பத்தில் 11 முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தனா். விழாவில் பாஜக நிா்வாகிகள் செந்தூா்பாண்டியன், திருமுருகன், பிலவேந்திரன், முன்னாள் அறங்காவலா் வீரபாண்டியன் மற்றும் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
Next Story