கோவிலூரில் பாஸ்க்கு திருவிழா தேர் பவனி
கோவிலூர் சவேரியார் தேவாலயத்தில் மேள தாளங்கள் முழங்க வான வேடிக்கைகளுடன் ஆடம்பர தேர் பவனி. பக்தர்கள் சிறப்பு வழிபாடு.
தர்மபுரி மாவட்டம்,நல்லம்பள்ளி வட்டம், தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோவிலூரில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித சவேரியார் தேவாலயம் அமைந்துள்ளது. பாஸ்கு திருவிழா மூன்று நாட்கள் நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்வாக ஞாயிற்றுக்கிழமை நேற்று இரவு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்ற பின்னர். இன்று திங்கட்கிழமை விடியற்காலை 3 மணி அளவில் பங்குத்தந்தை ஆரோக்கியசாமி தலைமையில் ஆடம்பர தேர் பவனி, மேல தாளங்கள் முழங்க, வான வேடிக்கைகளுடன் ஊர்வலமாக ஊரை சுற்றி வலம் வந்தது காலை 6 மணிக்கு தேர் நிலை நிறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story