வயலோகத்தில் புனித அன்னை அடைக்கல மாத ஆலய தேர் பவனி

வயலோகத்தில் புனித அன்னை அடைக்கல மாத ஆலய தேர் பவனி

மாதா தேர் பவனி

வயலோகத்தில் புனித அன்னை அடைக்கல மாத ஆலய தேர் பவனி நடைபெற்றது.

வயலோகத்தில் உள்ள புனித அன்னை அடைக்கல மாத ஆலயத்தில் அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக செபஸ்தியார் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே வயலோகம் கிராமத்தில் பழமை வாய்ந்த புனித அன்னை அடைக்கல மாத ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் செபஸ்தியர் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.

200 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்தில் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். இதனை தடுக்கும் விதமாக கடந்த 200 ஆண்டுகளாக அம்மை நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் வாரிசுகள் ஆண்டுதோறும் செபஸ்தியர் திருவிழாவை நடத்துவது வழக்கம்.

அந்த வகையில் இன்று ஆலயத்தை சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் பந்தல் அமைத்து புனித அன்னை அடைக்கலம் மாதா உருவப்படத்தை வைத்து , இரண்டு சப்பர தேர்களை இழுத்துக் கொண்டு வழிபட்டனர்.

இந்த திருவிழாவில் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுதாரர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த திருவிழாவை நடத்தவில்லை என்றால் மீண்டும் அனைவரையும் அம்மைய நோய் தாக்கும் என்ற ஐயம் நிலவுவதால் இது போன்ற வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த வழிபாட்டில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு இனி வரும் காலங்களில் இது போன்ற துன்பங்கள் நிகழாமல் இருக்க வேண்டும் என வழிபட்டனர்.

Tags

Next Story