ஆர்.கே பேட்டை அருகே தண்ணீர் வற்றாத குவாரியால் ஆபத்து

ஆர்.கே பேட்டை அருகே தண்ணீர் வற்றாத குவாரியால் ஆபத்து

தண்ணீர் இல்லாத குவாரிகள்

ஆர்.கே பேட்டை அருகே தண்ணீர் வற்றாத குவாரியால் ஆபத்து உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் ஏராளமான மலைகள் உள்ளன. இதில், பாறை குவாரிகள் செயல்பட்டு வந்தன. கைவிடப்பட்ட பாறை குவாரிகள் தற்போது வற்றாத நீர்நிலையாக உருமாறியுள்ளன. ஆர்.கே.பேட்டை அடுத்த காந்தகிரி மலையடிவாரம், பாலாபுரம் அடுத்த எஸ்.கே.வி.கண்டிகை உள்ளிட்ட பகுதியில் உள்ள பழைய பாறை குவாரிகள்,

தற்போது மழைநீரால் நிரம்பியுள்ளன. பாறையை அடித்தளமாக கொண்டுள்ளதால், இதில், தேங்கியுள்ள தண்ணீர் ஆவியானால் மட்டுமே காலியாகும். முற்றிலும் ஆவியாவதற்குள் மழை பெய்ய துவங்கி விடுவதால், ஆண்டு முழுதும் நிரம்பியுள்ளன.

எஸ்.கே.வி.கண்டிகை அம்மன் கோவில் அருகே உள்ள பாறை குவாரி, தண்ணீர் நிரம்பி, ஏரி போல் காணப்படுகிறது. கோடை விடுமுறை துவங்கியுள்ள நிலையில், சிறுவர்கள் நீர்நிலைகளை தேடி செல்ல ஆரம்பித்துள்ளனர். இந்த பாறை குவாரிகளை ஒட்டி, எச்சரிக்கை பதாகைகளை வைத்து சிறுவர்களை தடுத்து நிறுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story