ஆக்கிரமிப்பால் கடைகளுக்குள் மழைநீர் புகும் அபாயம்
ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை
தூத்துக்குடியில் தனியார் ஆக்கிரமிப்பால் மழை நீர் தேங்குவதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பார்டர் பஜார் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக பார்டர் பஜார் வியாபாரிகள் மாநகராட்சி உதவி ஆணையருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில்,
தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கடையில் வியாபாரம் செய்து கொண்டு இருக்கிறவர்கள் மற்றும் எதிர்புறம் தனியார் கடையில் வியாபாரம் செய்பவர்கள் மழைநீர் வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறோம். இந்நிலையில் மழைநீர் வெளியே செல்வதில் பிரச்சணை இருக்கிறது. முகப்பு டீ கடையை சார்ந்த, தனி நபர் நடைபாதையில் மணல் திட்டு போட்டு அடைத்து வைத்து இருக்கிறார். இதனால் மழை காலங்ளில் தண்ணீர் வெளியே செல்வதில் சிரமம் இருக்கிறது.
அதிக கனமழை பெய்ததால். எங்கள் கடைக்குள் தண்ணீர் வந்து விடுகிறது. நாங்கள் ஏற்கனவே கடந்த கனமழையில் பாதிப்புக்கு உள்ளாகி அதிலிருந்து மீள முடியாத சூழலில் மீண்டும் கடன் வாங்கி வியாபாரம் செய்து கொண்டிருக்கிறோம். ஆகவே. மீண்டும் கனமழை இருப்பதால், மீண்டும் பாதிப்புக்கு உள்ளானால் எங்களால் தாங்கிக் கொள்ள முடியாது.
இதற்கு இடையில் வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை கொடுத்துள்ள நிலையில் மீண்டும் இதுபோன்று மணல் திட்டு கடைக்குள் தண்ணீர் வரவழைத்து விடும். எங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு உண்டாக்கும். ஆகவே உதவி ஆணையாளர் நேரடியாக வந்து ஆய்வு செய்து மணல் திட்டை அகற்றிட வேண்டும்.ஸ்மார்ட் சிட்டி பார்க்கிங் ஏரியா அதே நபரால் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. அதையும் உடனடியாக அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.