திமுக பிரமுகர்களுக்கு இடையே உக்கட்சி பூசலால் பரபரப்பு.

திமுக பிரமுகர்களுக்கு இடையே உக்கட்சி பூசலால் பரபரப்பு.

வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள்

திமுக பிரமுகர்களுக்கு இடையே உக்கட்சி பூசலால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அடுத்த திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட வீரராகவபுரம் பகுதியில் லோகநாதன்-தனலட்சுமி என்ற தம்பதிக்கு சொந்தமான இடம் 2000 ஆயிரம் சதுர அடியில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு லோகநாதன் மறைந்த நிலையில் அந்த வீட்டை காலி செய்து வேறு ஒரு இடத்திற்கு தனலட்சுமி அவரது பிள்ளைகளுடன் குடி பெயர்ந்தார்.

தற்போது அந்த இடத்தில் ஏற்கனவே வாழ்ந்த வீடு பாழடைந்து உள்ள நிலையில் அந்த வீட்டை மாற்றி புதிதாக வீடு கட்டுவதற்காக பணிகளை மேற்கொண்டனர். அப்போது அங்கு வந்த திருவேற்காடு நகராட்சி அதிகாரிகள் இந்த இடம் நகராட்சிக்கு சொந்தமான இடம் எனவும் வீடூ கட்டும் பணி நடக்க கூடாது என தடுத்து நிறுத்தினார்கள்.

மேலும் இந்த இடத்திற்கு நகராட்சி சார்பில் வரி கட்ட வேண்டும் என நகராட்சியே அனுப்பிய படிவத்தை காட்டினர், அரசுக்கு சொந்தமான இடத்திற்கு வரி கட்ட சொல்லி எப்படி படிவம் வரும் என கேள்வி கேட்ட நிலையிலும் இந்த இடம் தனக்கு சொந்தமான இடம் என தனலட்சுமி கூறிய நிலையில் பட்டா உள்ளது, வரி கட்டுகிறேன் ,மின் இணைப்பு உள்ளது மேலும் 40 வருடமாக என் கணவர் பெயரில் உள்ள இடத்தை நகராட்சிக்கு சொந்தமானது என எப்படி கூற முடியும் என நகராட்சி அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பிய நிலையில் நகராட்சி அலுவலர்கள் விட்டு சென்றனர்.

மேலும் இந்த இடத்தை திமுக வட்ட செயலாளர் கண்ணன் என்பவர் அபகரிக்க முயற்சி செய்வதாக அவதூறு பரப்பியதாக கூறப்பட்ட நிலையில் அப்போது அங்கு வந்த திமுக வட்டச் செயலாளர் கண்ணன் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். அப்போது பட்டா உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் உள்ள இடத்தை எப்படி நீங்கள் நகராட்சிக்கு சொந்தமானது என சொல்ல முடியும் என கேள்வி எழுப்பிய நிலையில் அருகாமையில் பல வீடுகள் உள்ள நிலையில் இந்த இடம் மட்டும் எப்படி நகராட்சிக்கு சொந்தமாகும் என கேள்வி கேட்டார் அதனை அடுத்து அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பி சென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏழை பெண்ணுக்கு ஆதரவாக வந்த தன்னை நிலம் அபகரிக்க வருவதாக அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கூறி பொய்யான செய்தி பரப்பி வருகின்றனர். இதனை நிறுத்தவில்லை என்றால் நகராட்சி அதிகாரிகள் மீதும் நகர மன்ற கவுன்சிலரின் கணவரின் மீதும் வழக்கு தொடர்வேன் என தெரிவித்தார்.

Tags

Next Story