புதுச்சத்திரம் பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் இல்லை!-பொதுமக்கள் புகார் நடவடிக்கை எடுத்த நாமக்கல் எம்பி!

புதுச்சத்திரம் பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் இல்லை!-பொதுமக்கள் புகார் நடவடிக்கை எடுத்த நாமக்கல் எம்பி!

 வி.எஸ் மாதேஸ்வரன் 

நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் பொதுமக்களின் முக்கிய அத்தியாவசிய தேவையான குடிதண்ணீர் வழங்குவதில் எவ்வித தங்கு தடையும் இருக்கக் கூடாது என்று அதிகாரிகள் மத்தியில் அறிவுறுத்தினார்.

நாமக்கல் மாவட்டம்,புதுச்சத்திரம் ஒன்றிய பகுதிகளில் முறையான ஆற்றுநீர் விநியோகிக்கவில்லை என்ற பொது மக்களின் புகாரை அடுத்து நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ் மாதேஸ்வரன் எம்பி, தலைமையில் குடிநீர் அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மத்தியில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட மாதேஸ்வரன் எம்பி., அனைத்து பகுதிகளிலும் நன்றி தெரிவிப்பு கூட்டம் நடத்தி வருகிறார். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்தி பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்று வருகிறார்.

இந்நிலையில் பெரும்பாலான மக்கள் தங்கள் பகுதிகளில் ஆற்று நீர் வரவில்லை என்று புகார் அளித்தனர். இதனை அடுத்து நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் குடிநீர் திட்ட அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ,ஆற்று நீர் ஆப்ரேட்டர்கள் அடங்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் பொதுமக்களின் முக்கிய அத்தியாவசிய தேவையான குடிதண்ணீர் வழங்குவதில் எவ்வித தங்கு தடையும் இருக்கக் கூடாது என்று அதிகாரிகள் மத்தியில் அறிவுறுத்தினார். மேலும் தண்ணீர் தொட்டிகள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டும் மேலும்,தண்ணீர் பைப் லைனில் உடைப்பு ஏற்படும் பட்சத்தில் அதை ஆபரேட்டர்கள் உடனடியாக சரி செய்வதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும் எனவும், தண்ணீர் ஆபரேட்டர்கள் பொதுமக்களின் குறைகளை சொல்லும் பொழுது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இன்றி பதில் அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

ஒவ்வொரு ஊராட்சி பகுதிக்கும் தண்ணீர் வரும் அளவை ஊராட்சி மன்ற தலைவர்களும் ஊராட்சி செயலாளர்களும் பொதுமக்களும் தெரியும் வண்ணம் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்று கண்டிப்புடன் கூறினார். இக்கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துலெட்சுமி,சுதா, குடிநீர் வடிகால்வாரிய அதிகாரிகள் உதவி செயற்பொறியாளர் அகிலாபானு, முனியன், இளநிலை பொறியாளர் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்பு ஒப்பந்ததாரர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story