கோவை மாநகரில் கள்ள சாராயம் எங்கும் இல்லை - மாநகர காவல் ஆணையர்
மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்
கோவை மாநகர ஆயுதப்படை வளாகத்தில் காவலர் குடும்பங்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் காவலர் குடும்பங்களின் விற்பனையகங்கள் வங்கி கடன் கூடங்களின் கண்காட்சி இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது.
இக்கண்காட்சியில் கோட்டா,காட்டன் சாப்ட் சில்க்,டானா சேலைகள் என பல்வேறு வகையான சேலை ரகங்கள் விற்பனைக்கு காவலர்கள் குடும்பத்தினர் வீட்டிலேயே தயாரித்த மசாலா பொடி வகைகள்,ஷாம்பு,ஹேர் கலர்,சோப்புகள் மற்றும் களிமண் கொண்டு தயாரிக்கபட்ட சிலைகள்,மரசெக்கு எண்ணெய் வகைகள், அணிகலன்கள் விற்பனைக்கு வைக்கபட்டு உள்ளது.
கோவையில் பணியாற்றி வரும் காவலர்கள் நிலம் வாங்கவும் கடன் உதவி பெற தேசிய மற்றும் தனியார் வங்கி அரங்குகள் அமைக்கபட்டுள்ளதை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவை மாநகரை பொறுத்தவரை கள்ளச்சாராயம் எங்கும் கிடையாது என்றும் இருப்பினும் வெளியில் இருந்து கொண்டு கொண்டு வராமல் இருப்பதற்கு தீவிர சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் நுண்ணறிவு பிரிவு மூலம் கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.கோவை மாநகர அனைத்து சாலைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு தானியங்கி மூலம் அபராதம் விதிக்கபட்டு வரும் நிலையில் இன்று முதல் புதிய வழிமுறை கொண்டு வரப்படுவதாக மீண்டும் மீண்டும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவர்கள் மீது அதிகபட்ச நடவடிக்கை எடுக்க புள்ளி விபரங்கள் எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.அனுமதி இல்லாத மதுக்கூடங்கள் அனுமதிக்கபட்ட நேரத்தை கடந்து விற்பனை செய்பவர்களின் உரிமம் ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருவதாக தெரிவித்தவர் நாளை மற்றும் மறுதினம் காலை காவலர்களுக்கு யோகா வகுப்புகளும் பிற்பகல் அவர்களது குடும்பத்தினருக்கு யோகா வகுப்புகள் நடத்தபட உள்ளதாகவும் தெரிவித்தார்.