பிரதமர் வேட்பாளரை அறிவிக்க அவசியமில்லை- கீ.வீரமணி

பிரதமர் வேட்பாளரை அறிவிக்க அவசியமில்லை- கீ.வீரமணி

கி.வீரமணி 

பாஜக அரசு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் மனுதர்மம் தான் அரசியல் சட்டமாக்கப்படுமே தவிர வேறு எதுவும் இல்லை, இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை, அது தான் உண்மையான ஜனநாயகம் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.

கோவையில் நடைபெற்ற திராவிட கழக பொதுகூட்டத்தில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் கீ.வீரமணி வந்தார்.

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கோவிலை நம்பி வாக்குகளை பெற தேர்தலை நடத்தலாம் என பிரதமர் நம்பி கொண்டிருப்பதாகவும் அதை மக்கள் மத்தியில் தெளிவாக விளக்க இந்தியா கூட்டணி தயாராகிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். பிரதமர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பது மக்களுக்கு நன்றாக தெரிந்துவிட்டதாகவும் நாடாளுமன்ற பிரச்சனையில் பிரதமர் வாய் திறக்கவில்லை எனவும் குறிப்பாக தமிழகத்தில் நடந்த பேரிடரை கண்டுகொள்ளவில்லை என்றார்.

எந்த வகையிலும் தங்களுக்கு ஆதரவு இல்லை என்பதால் பக்தி மாத்திரையின் மூலமாக தேர்தல் என்ற மயக்க பிஸ்கெட்டுகளை கொடுத்து மீண்டும் ஆட்சிக்கு வரலாம் என இறுதியாக ராமனை நம்பி இருப்பதாகவும் அதனால் தான் அவசரகதியில் ராமன் கோவிலை கட்டி திறக்க இருப்பதாக தெரிவித்தார். இதுவரை இந்தியா மட்டுமல்ல எந்த நாட்டிலும் கோவிலுக்காக பிரதமர் அடிக்கல் நாட்டி அதனை திறந்து யாரும் பார்த்தது இல்லை எனவும் இந்திய அரசியல் சட்டத்தை காப்பாற்றபட வேண்டும்.

இந்த அரசு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் மனுதர்மம் தான் அரசியல் சட்டமாக்கப்படுமே தவிர வேறு எதுவும் இல்லை என்றார். இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் இது தான் உண்மையான ஜனநாயகம் எனவும் அப்போது தெரிவித்தார்.சேலம் பெரியார் பல்கலைகழகத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை குறித்து பேசியவர் ஆளுநர் எப்படி நடந்துகொள்கிறார் என மக்கள் புரிந்துகொள்ள நல்ல வாய்ப்பு எனவும் அரசியல் அமைப்பு சட்டம் 162 படி ஆளுநர் மாநில அரசின் ஒரு பகுதி மட்டுமே என்றவர் ஒருவர் மீது அரசு வழக்கு போட்டுள்ள நிலையில் அங்கே செல்ல கூடாது எனவும் துணை வேந்தர் வழக்கு தொடர்பான விசாரணை நடந்துகொண்டிருக்கும் போது குறிப்பாக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு ஜாமினில் உள்ள போது ஆளுநர் சென்று விசாரிக்கிறார் என்றால் என்ன அர்த்தம் என கேள்வி எழுப்பினார்

. வழக்கை ஒன்றுமில்லாமல் மாற்றவும் அதனை மறைப்பதற்காகவும் தான் ஆளுனர் போவதாகவும் கூறினார்.பல தவறுகளை அடுக்கடுக்காக செய்து கொண்டிருக்கும் ஆளுநர் இதிலும் தனது சுய உருவத்தை காட்டி பாஜக அரசியலை இதிலும் நடைமுறைபடுத்துவதின் இதன் காரணமாக தான் இன்று அவரை எதிர்த்து மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதாக கூறினார். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டங்கள் தடா,பொடா,சட்டம் போல கொடுமையானது எனவும் மனித உரிமைகளை பறிப்பதில் முக்கியமான ஒன்றாகவும் காலணி சட்டங்களை போக்கி புதிய சட்டங்களை கொண்டு வருவதற்கு பதிலாக அதை விட கொடுமையான சட்டத்தை கொண்டுவந்துள்ளனர் என்றவர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலைக்குமா என கேள்வி எழுந்தாலும் நாடு முழுவதும் வழக்கறிஞர்கள், மனித உரிமைகள் ஆர்வலர்கள் புதிய சட்டங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர் எனவும் அப்போது தெரிவித்தார்.

Tags

Next Story