தண்ணீர் பந்தல் இருந்தும் தாகம் தீர்க்க வழி இல்லை

தண்ணீர் பந்தல் இருந்தும் தாகம் தீர்க்க வழி இல்லை

காஞ்சிபுரத்தில் தண்ணீர் பந்தலில் தாகம் தீர்க்க வரும் பொதுமக்கள் அங்கு யாரும் இல்லாத்தால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.


காஞ்சிபுரத்தில் தண்ணீர் பந்தலில் தாகம் தீர்க்க வரும் பொதுமக்கள் அங்கு யாரும் இல்லாத்தால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் எதிரில் கூட்டுறவு துறை சார்பில், இரு இடங்களில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை, கடந்த 25ம் தேதி, கலெக்டர் கலைச்செல்வி திறந்து வைத்தார். இரு தினங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தன. இருநாட்களாக பந்தலில், தண்ணீர் வைக்கவில்லை. இதனால், அந்த சாலை வழியாக சென்றவர்கள் தண்ணீரை தேடி அலைய வேண்டிய நிலை ஏற்பட்டது. அரசியல் கட்சியினர், தண்ணீர் பந்தல் திறந்தால், பராமரிப்பு இல்லாமல் விட்டுவிடுவதை போல, கூட்டுறவு துறை சார்பில் திறக்கப்பட்ட தண்ணீர் பந்தலும், தண்ணீர் இல்லாமல் இருப்பது வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, தண்ணீர் பந்தலில் அனைத்து நாட்களிலும், தண்ணீர் கிடைக்கும் படி ஏற்பாடு செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. காஞ்சிபுரம் காந்தி சாலை, பெரியார் துாண் அருகில், காஞ்சி மாநகரம், தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை, கடந்த 26ம் தேதி மாவட்ட செயலர் சுந்தர் திறந்து வைத்தார். தொடர்ந்து இரு நாட்களுக்கு தண்ணீர் பந்தலை முறையாக பராமரித்தனர். இந்நிலையில், நேற்று பந்தலில் இருந்த குடிநீர் பானைகள் மாயமாகின. திறப்பு விழா விளம்பரத்திற்காக அமைக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, மாவட்ட செயலர் சுந்தர் படம் இடம்பெற்ற பிளக்ஸ் பேனர் மட்டுமே பளீச் என, தெரிகிறது. இதனால், தண்ணீர் பந்தலில் தாகம் தீர்க்க வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். தண்ணீர் பந்தலை தடபுடலாக திறந்து விளம்பரம் செய்யும் அரசியல் கட்சியினர், கோடை முடியும் வரை, தண்ணீர் பந்தலை முறையாக பராமரிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள்வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story