தாழ்வு மனப்பான்மை இருக்கக் கூடாது : பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் 

தாழ்வு மனப்பான்மை இருக்கக் கூடாது : பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் 
பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் பாரதிதாசன்
பள்ளி விழாவில் கலந்துகொண்டு உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் தற்போதைய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் ஆன பாரதிதாசன் சிறப்புரையாற்றினார்
கடின உழைப்பு இருந்தால் நாம் நிச்சயமாக வெற்றி பெறலாம் உங்களிடம் தாழ்வு மனப்பான்மை இருக்கக் கூடாது என்றார் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவருமான வி. பாரதிதாசன் புதன்கிழமை பேசினார். பட்டுக்கோட்டை வட்டம், ஆலத்தூர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ரூ. 60 ஆயிரம் மதிப்பில் கழிப்பறை கட்டடம் புதுப்பித்தல் மற்றும் நாப்கின் எரியூட்டும் இயந்திரம் அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மனோரா ரோட்டரி சங்கத் தலைவர் எஸ்.சதீஷ்குமார் தலைமை வகித்தார். சங்கத்தின் உதவி ஆளுநர் ஏ.எஸ். வீரப்பன், பள்ளித் தலைமையாசி ரியை கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் நீதிபதி வி.பாரதிதாசன் மேலும் பேசியது: பெண்களின் உயர்வு தான் சமுதாயத்தின் உயர்வு. கடின உழைப்பு இருந்தால் நிச்சயமாக வெற்றி பெறலாம். உங்களிடம் தாழ்வு மனப்பான்மை இருக்கக் கூடாது. நாம் இலக்கை தீர்மானித்து விட்டு உழைத்தால் நிச்சயமாக நாம் வெற்றி பெறலாம் என்றார். மனோரா ரோட்டரி சங்கம் வழக்குரைஞர் ஜெயவீரபாண்டியன், எம்.ஆர். திருப்பதி, சி. நாகராஜன், ஆர்.மனோகரன், பொறியாளர் கண்ணதாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, ஆசிரியை முத்துக் காளி வரவேற்றார்.

Tags

Next Story