தீடிரென ஹெலிகாப்டர் வந்ததால் பரபரப்பு
சாத்தான்குளம் அருகே தீடிரென ஹெலிகாப்டர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம் பிடானேரி ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள சிட்கோவில் அமைக்கப்பட்டு இப்பகுதி மக்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் அரசின் ஓப்புதலோடு தனியார் தொழில் நிறுவனங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன இந்நிலையில் அப்பகுதியில் அப்பகுதியில் தொழிற் நிறுவனங்களை கொண்டு வர பல நிறுவனங்கள் ஓப்பந்தம் செய்துள்ளன. இந்நிலையில் சாத்தான்குளம் வட்டம் . கட்டாரிமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட அம்பலச்சேரி பகுதியில் தனியார் இடத்தில் தொழிற் நிறுவனம் தொழிற்சாலை அமைக்க ஆரம்ப கட்டப் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில் வியாழக்கிழமை மதியம் அந்த இடத்தில் ஹெலிகாப்டர் ஒன்று வந்து இறங்கியுள்ளது. அதனுடன் 10க்கு மேற்பட்ட கார்கள் அணிவகுத்து சென்றுள்ளது. பின்னர் சுமார் 15 நிமிடங்கள் கழித்து டெலிகாப்டர் திரும்பி சென்றுள்ளது. அம்பலச்சேரி பகுதியில் திடீரென ஹெலிகாப்டர் வந்து இறங்கியதால் அப்பகுதியில் மக்களிடம் ஆச்சரியத்தை உருவாக்கி உள்ளது. இது குறித்து விசாரித்த போது அதில் மும்பையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று கார் உதரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் நிறுவதற்காக அடிக்கல் நாட்டு பணி நடத்தியதாகவும், அதற்காக அந்நிறுவன அதிகாரிகள் வந்து சென்றுள்ளது தெரியவந்தது. .
இதுகுறித்து அரசு அதிகாரிகளிடமும் கேட்டபோது சிட்கோ அருகில் உள்ளதால் பல நிறுவனங்கள் தொழில் தொடங்கிட நிலங்கள் கையகபடுத்தியுள்ளன. அதன்படி தனியார் நிறுவனம் தொடங்கப்பட ஆயத்தப்பணிகள் நடத்திட வந்திருக்கலாம் என தெரிவித்தனர். இந்நிறுவனம் குறித்தும் அரசு அதிகாரிகள் தரப்பில் அப்பகுதி மக்களுக்கு முறையான விளககமோ அறிவிப்போ அளிக்கப்படவில்லையென பொதுமக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சாத்தான்குளம் பகுதி சமுக ஆர்வலர் ஓருவர் கூறுகையில், சாத்தான்குளம் பகுதியில் தொழிற் நிறுவனங்கள் வருவது வரவேற்க தக்கது. அம்பலசேரி பகுதியில் அமைய நிறுவனத்தில் கார் உதரி பாகங்கள் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிறுவனத்துக்கு வெளி பகுதியில் இருந்து பணியாளர்களை நியமிப்பதை விடுத்து இப்பகுதியைச் சேர்ந்த படிதத இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். எனவும், அரசு அதிகாரிகள் இந்நிறுவனம் குறித்த தகவல்களை பொதுமக்களுக்கு தெரியபடுத்திட வேண்டும் என்றார்.