கோவில் தெப்பக்குள சுற்றுச்சுவர் சரிந்து விழுந்ததால் பரபரப்பு

கோவில் தெப்பக்குள சுற்றுச்சுவர் சரிந்து விழுந்ததால் பரபரப்பு
சரிந்து விழுந்த தெப்பக்குள சுற்றுச்சுவர்  
அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தின் சுற்றுச்சுவர் திடீரென சரிந்து விழுந்ததால் பரபரப்பு; சமூக வலைத்தளங்களில் பரவும் காட்சிகள்; அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் தவிர்ப்பு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே முத்து மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் அமைந்துள்ளது. இந்த தெப்பகுளம் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த கனமழையால் நிறைந்தது. பல ஆண்டுகளுக்குப் பின் தெப்பக்குளம் நிறைந்ததால் அந்த தெப்பத்தில் தெப்ப தேர் விழா நடப்பதற்காக மராமத்து பணிகள் நடைபெற்று வந்தது. தேர் விடுவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில் இன்று (நவ.21) இந்த தெப்பத்தின் சுற்றுச்சுவரில் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அப்போது அங்கு யாரும் இல்லை என்பதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும் அருகே பள்ளிகள் இருப்பதால் அப்பகுதியில் போலீசார் நேரில் சென்று ஆய்வு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு பின் மழைநீர் நிறைந்து தெப்பத்தேர் விடும் நேரத்தில் தெப்பக்குள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது பக்தர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. மேலும் தெப்ப தேர் நடக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Tags

Next Story