பெட்ரோல் கேனுடன் வந்து மனு கொடுக்க வந்த நபரால் பரபரப்பு

பெட்ரோல் கேனுடன் வந்து மனு கொடுக்க வந்த நபரால் பரபரப்பு

மணிகண்டன் 

ஆம்பூர் அருகே நிலத்தை அபகரித்து கொண்டு கொலைமிரட்டல் விடுத்து வரும் கட்டப்பஞ்சாயத்து கும்பலிடம் இருந்து இடத்தை மீட்டு தர கோரியும், பாதுகாப்பு கேட்டும் பாதிக்கப்பட்ட நபர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெட்ரோல் கேனுடன் புகார் மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திரும்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஆஞ்சநேயர் கோயில் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் சுமார் 40 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த வீட்டை இடித்து 3 சென்ட் அளவுள்ள இடத்தை அதே தெருவை சேர்ந்த கட்டப்பஞ்சாயத்து கும்பல் அபகரித்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த இடம் மணிகண்டன் என்பவருக்கு சொந்தமானது என கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது. மேலும் மணிகண்டன் இடத்தை கேட்டால் அந்தக் கட்ட பஞ்சாயத்து கும்பல் அடியாட்களை கொண்டு கொலை செய்து விடுவேன் என கொலைமிரட்டல் விடுவதாகவும் இதனால் மணிகண்டன் குடும்பத்தார் வாழ முடியாமல் தவித்து வருவதாகவும் எனவே இடத்தை மீட்டு தர கோரி மணிகண்டன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெட்ரோல் கேனுடன் புகார் மனுவை கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக போலீசார் அவரிடம் இருந்து பெட்ரோல் கேனை பிடிங்கி கொண்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதால் பரப்பரப்பு ஏற்பட்டது அந்தப் புகார் மனுவில் தனக்கும் தன்னுடைய குடும்பத்தாருக்கும் காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் மேலும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் எங்களுக்கு சொந்தமான 3 சென்ட் இடத்தை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story