திருப்பத்தூர் நகராட்சியில் ஆணையாளரை கண்டித்து கோஷம் எழுப்பியதால் பரபரப்பு

திருப்பத்தூர் நகராட்சியில் ஆணையாளரை கண்டித்து கோஷம் எழுப்பியதால் பரபரப்பு
கோஷம் பொட்டவர்
திருப்பத்தூர் நகராட்சியில் ஆணையாளரை கண்டித்து கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சியில் 2024 மற்றும் 25 முதல் 2026 மற்றும் 27 ஆண்டு வரை மூன்று ஆண்டுகளுக்கு குத்தகை இனங்களின் பொது ஏலம் மற்றும் ஒப்பந்தபுள்ளி இன்று நடக்கவிருந்தது.

தினசரி காய்கறி மார்க்கெட்டில் கட்டணம் வசூல் செய்து கொள்ளும் உரிமை புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகளுக்கு சுங்க கட்டணம் வசூல் செய்து கொள்ளும் உரிமை பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பிட அறைகளில் கட்டணம் வசூல் செய்து கொள்ளும் உரிமை உள்ளிட்ட எட்டு வகையான இனங்களுக்கு குத்தகை உரிமைக்கு ஏலம் விடப்பட இருந்தது.

நகராட்சி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பேரிகாடுகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது குத்தகை ஏலம் எடுக்க உரிமைக்கோரிய அனைவரும் நகராட்சி அலுவலக வாசலில் காத்திருந்தனர். அப்போது திருப்பத்தூர் நகராட்சி கவுன்சிலர்களை மட்டும் நகராட்சி அலுவலகத்தில் உள்ளே அனுமதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஏலத்தாரர்கள் கவுன்சிலர்களை வெளியில் அனுப்புங்கள் அவர்களுக்கு ஏலம் நடக்கும்

இடத்தில் என்ன வேலை போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடிரென்று பேரிகாடின் மீது ஏறினர் பின்னர் போலீசார் சமரசம் செய்தனர்.

இதனை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்க நகர செயலாளர் பைரோஷ் கான் என்பவர் நகராட்சி ஆணையாளரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர் இதனால் பரப்பரப்பு காணப்பட்டது. பின்னர் நகராட்சி நிர்வாகம் சார்பாக ஆணையர் திருநாவுக்கரசு இன்று நடைபெற இருந்த மறு பொது ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி தற்போது நிர்வாக காரணத்திற்காக தேதி குறிப்பிடாமல் ஏலம் ஒத்தி வைக்கப்படுகிறது மறு ஏழாம் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

பின்னர் ஏலம் ஒத்தி வைத்ததை தொடர்ந்து ஏலம் எடுக்க வந்தவர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் காவலர்கள் அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story