பொதுமக்கள் முற்றுகையால் பெரும் பரபரப்பு

பொதுமக்கள் முற்றுகையால் பெரும் பரபரப்பு

கான்கிரீட் தடுப்பு சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

கான்கிரீட் தடுப்பு சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பள்ளிபாளையம் டிவிஎஸ் மேடு என்ற பகுதியில், சாலையின் நடுவே கான்கிரீட் தடுப்பு சுவரானது சுமார் ஒன்றரை அடிக்கு மேல் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாதாபுரம் என்ற பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், கான்கிரீட் தடுப்பு சாலை அமைக்கப்பட்டால், எதிர்சாலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும். இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளதால், பொதுமக்களுக்கு மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படும் .எனவே எதிர்சாலைக்கு செல்லும் வகையில் வழிவிட்டு கான்கிரீட் தடுப்புச் சுவர்களை அமைக்க வேண்டும் என கான்கீரிட் சாலை அமைக்கும் இடத்தை 30-க்கும் மேற்பட்ட மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது . இதனை அடுத்து அங்கு தகவலின் பேரில் விரைந்த பள்ளிபாளையம் நகர மன்ற தலைவர் மோ.செல்வராஜிடம் இதுகுறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பேசி பொதுமக்கள் பாதிக்க வண்ணம் கான்கிரீட் சாலை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நகர மன்ற தலைவர் உறுதி அளித்தார்.இதனை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். அதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது...

Tags

Next Story