பல்லடம் வாக்குச்சாவடியில் எம்எல்ஏ தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு
எம்எல்ஏ தர்ணா போராட்டம்
பல்லடம் வாக்குச்சாவடியில் செல்வராஜ் எம்.எல்.ஏ. தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு. திருப்பூர், தமிழக முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடந்தது. இந்நிலையில் திருப்பூர் தெற்கு தொகுதி செல்வராஜ் எம்.எல்.ஏ. காலை தனது வாக்கை பதிவு செய்துவிட்டு, வாக்கு சாவடி மையங்களில் ஆய்வு செய்ய தொடங்கினார்.
இந்நிலையில் கோவை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடிக்கு சென்றபோது, அங்கு துணை ராணுவ படையினர் வாக்களிக்க வரும் பொது மக்களுக்கு இடையூறு செய்ததாகவும், வயதானவர்கள் வாகனங்களில் வந்தால் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்ததாகவும் தெரிகிறது. இதனை கண்டித்தும், வாக்காளர்களுக்கு இடையூறு செய்யும் துணை ராணுவ படையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் செல்வராஜ் எம்எல்ஏ தர்ணாவில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து அங்கு இருந்த வாக்குச்சாவடி அதிகாரிகள் செல்வராஜ் எம்எல்ஏவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் போராட்டத்தை கைவிட்டார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பல்லடம் நகர செயலாளர் ராஜேந்திர குமார், வடக்கு மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் பார்த்திபன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.