ஆம்னி பேருந்தின் முன் பகுதியில் எழுந்த புகையால் பரபரப்பு

ஆம்னி பேருந்தின் முன் பகுதியில் எழுந்த புகையால் பரபரப்பு

பேருந்தில் எழுந்த புகைமண்டலம் 

கொடைக்கானலில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்ட தனியார் ஆம்னி பேருந்தின் முன் பகுதியில் எழுந்த புகையை கண்டு சுற்றுலாப்பயணிகள் அச்சத்துடன் பேருந்தை விட்டு இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இருந்து தினந்தோறும் சென்னை,பெங்களூருக்கு தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகிறது, இந்நிலையில் நேற்று மாலை வேளையில் கொடைக்கானல் 7 ரோடு சந்திப்பு பகுதியில் இருந்து பெங்களூருக்கு தனியார் ஆம்னி பேருந்து(ராயல் பஸ்) புறப்பட்டது,இந்நிலையில் பயணிகள் பேருந்தில் ஏறும் நேரத்தில்,பேருந்தின் முன் பக்கத்தில் இருந்து புகை மண்டலமாக சிறிது நேரம் காட்சியளித்தது, இதனால் பயணிகள் அச்சத்துடன் பேருந்தை விட்டு இறங்கினர்,

இதனை தொடர்ந்து பேருந்தின் முன்பகுதியான ஸ்டேரிங்க் அடிப்பகுதியில் பார்த்த போது ஹாரன் வயரில் இருந்து புகை வருவதுடன் தீ பிடிக்க துவங்கியதை கண்டு துரிதமாக அதனை சரி செய்யும் பணியில் பேருந்து ஓட்டுனர் ஈடுபட்டார்,மேலும் புகையானது முழுவதும் குறைந்தது, மேலும் ஹாரன் வயர் செல்லும் வயர் லைன் பழுதின் காரணமாக புகை வந்ததாக ஓட்டுனரால் தெரிவிக்கப்பட்டது.

மேலும் வயர்கள் சீரமைக்கும் பணிகள் தாமதமானதால், வேறு பேருந்து மாற்றப்படுவதாக பேருந்தில் இருந்த பயணிகளிடம் ஆம்னி பேருந்து பணியாளர்கள் தெரிவித்தனர், இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது, மேலும் மலைப்பகுதிகளில் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளை தரமான முறையில் சோதனை செய்து இயக்க வேண்டும் என பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளிடையே வேண்டுகோள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story