அந்தோணியார் கோவிலில் நாளை தேர்பவனி

அந்தோணியார் கோவிலில் நாளை தேர்பவனி

தேர்பவனி

கள்ளக்குறிச்சி மாவட்டம்,மேல்நாரியப்பநல்லூரில் அந்தோணியார் கோவிலில் நாளை தேர்பவனி நடைபெற உள்ளது.

சின்னசேலம் அடுத்த மேல்நாரியப்பனூரில் உள்ள நூற்றாண்டு பெருமை வாய்ந்த புனித அந்தோணியார் கோவில் தேர்பவனி கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நாள்தோறும் திருப்பலி பூஜை, வழிபாடு, தேர்பவனி, சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வருகை புரிவதால் சென்னை, பெங்களூரூ செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள், திருவிழா நாட்களில் மேல்நாரியப்பனுார் ரயில்வே ஸ்டேஷனில் நின்று செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதேபோல் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கிறிஸ்துவர்கள் மாட்டு வண்டிகள், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சென்று தங்கி வழிபட்டு வருகின்றனர். நாளை (13ம் தேதி) இரவு 10 மணிக்கு பெருவிழா திருத்தேர் பவனி நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க கூடும் என்பதால் எஸ்.பி.,சமய்சிங் மீனா மேற்பார்வையில் ஏ.டி.எஸ்.பி., 12 இன்ஸ்பெக்டர்கள், 21 சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tags

Next Story