பொருளையோ பணத்தையோ கொடுத்தால் ஓட்டு போடுவார்கள் என எண்ணுகிறார்கள்

பொருளையோ பணத்தையோ கொடுத்தால் ஓட்டு போடுவார்கள் என எண்ணுகிறார்கள்

வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர் 

பொருளையோ பணத்தையோ கொடுத்தால் ஓட்டு போட்டு விடுவார்கள் என எண்ணுகிறார்கள் என செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.

கரூர் பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக போட்டியிடுபவர் செந்தில்நாதன். இன்று கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, காளையாபட்டி, வீரிய பட்டி, விராலிப்பட்டி, வீரணம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

அப்போது, அப்பகுதியில் திரண்டு இருந்த பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.இதனை தொடர்ந்து அங்கு கூடியிருந்த பொது மக்களிடையே பேசிய செந்தில்நாதன், தேர்தலில் கடைசி நேரத்தில் மக்களுக்கு பொருட்களையோ, பணத்தையோ கொடுத்தால் ஓட்டு போட்டு விடுவார்கள் என எண்ணுகிறார்கள். ஏற்கனவே வெற்றி பெற்று ஐந்தாண்டுகள் கழித்து மீண்டும் ஓட்டு கேட்டு அவர்கள் எதற்காக வருகிறார்கள்? என கேள்வி எழுப்பினர். மே

லும், கிராம பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு தார் சாலையோ, குடிநீர் வசதியோ, மின்விளக்கு வசதியோ இல்லையென்றால் அவர்களுக்கு அதைப் பற்றி என்ன கவலை? எனவும் கேள்வி எழுப்பினார். எதைப் பற்றியும் கவலைப்படாத, ஐந்தாண்டு காலம் தொடர்ந்து உறுப்பினராக உள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் தான் ஜோதிமணி.

சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும், பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும், மக்கள் பணியாற்ற வேண்டும். மக்களையே சந்திக்காத இவர்கள் எப்படி மக்கள் பணியாற்ற முடியும் என்றும், திமுக, அதிமுக மாறி மாறி ஆட்சியில் இருந்தபோதும் மக்களுடைய தேவைகளை புரிந்து எதுவும் செய்து கொடுக்கவில்லை. திமுகவை பொருத்தவரை கடந்த இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் கிராமத்தில் உள்ள ஏழு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கஞ்சாவிற்கும்,

போதைப் பொருளுக்கும், டாஸ்மாக்க்கும் அடிமையாகி விட்டனர். இப்படித்தான் தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்ற வருவதாக குற்றம் சாட்டினார். எனவே இந்த முறை தாமரைக்கு வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story