பல ஆண்டுகள் திமுகவை தாங்கி பிடிப்பார்கள்: மாநில தலைவர் தியாகராஜன்

பல ஆண்டுகள் திமுகவை தாங்கி பிடிப்பார்கள்: மாநில தலைவர் தியாகராஜன்

மாநில செயலாளர்

இன்னும் பல ஆண்டுகள் திமுகவை ஆசிரியர்கள் தாங்கிப் பிடிப்பார்கள் தமிழ்நாடு ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் தமிழ்நாடு மாநில தலைவர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் தமிழ்நாடு ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கு.தியாகராஜன் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், ஆசிரியர்கள் தொடர்ந்து ஆதரிக்கின்ற தொடர்ந்து நம்பிக் கொண்டிருக்கின்ற ஒரு இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம் இயக்கம்,

திராவிட முன்னேற்ற கழகம் எப்பொழுதெல்லாம் ஆட்சியில் இருக்கிறதோ அப்பொழுதெல்லாம் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது வரலாறு இன்றைக்கும் ஆசிரியர்களின் பிரதான கோரிக்கைகளான பழைய ஓய்வூதிய திட்டம் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் இரண்டு ஆண்டுகளில் நிறைவேற்றி தரப்படும் என்ற நம்பிக்கையோடு ஆசிரியர்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள் எனவும்,

சொன்னதை செய்வார்கள் என்ற கடந்த கால வரலாற்றின் அடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை ஆசிரியர்கள் நம்பிக்கொண்டு இருக்கிறார் எனவும், ஆசிரியர்களை பெரிதும் மதிக்கின்ற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 40 க்கு 40 வெற்றிக்குப் பிறகு கலந்து கொள்கின்ற விழா ஆசிரியர்களை போற்றக்கூடிய விழாவாக இருக்க வேண்டும் என சொல்லி 1728 தலைமை ஆசிரியர்களுக்கு விருது,

வழங்கக்கூடிய விழாவில் கலந்து கொண்டார் எனவும், சில ஆண்டுகளுக்கு முன்பாக தனது பிறந்த நாள் பரிசாக ஆசிரியர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார் எனவும், ஆசிரியர்கள் வைக்கக்கூடிய நியாயமான கோரிக்கைகளை உடனடியாக பரிசீலனை செய்து உடனடியாக நிறைவேற்றிக் கொடுப்பவர் தமிழ்நாடு முதலமைச்சர் எனவும்,

தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றிக் கொடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் அடுத்தபடியாக ஆசிரியர்கள் அரசு ஊழியர்களை சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றி தருவார் எனவும், தொகுப்பு ஊதியத்தை ஒழித்தது திராவிட முன்னேற்ற கழக அரசு, குடும்ப நலன் நிதியை உயர்த்தியது திராவிட முன்னேற்றக் கழக அரசு, ஆசிரியர்களை கௌரவப்படுத்தும் விதமாக ராதாகிருஷ்ணன் விருதை வழங்கியது.

திராவிட முன்னேற்றக் கழக அரசு, அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தி ஆசிரியர்களும் ஒரு கம்பீரத்தை கொடுத்தது திராவிட முன்னேற்றக் கழக அரசு, 2026 மட்டுமல்ல 2046 இன்னும் பல ஆண்டுகள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியை ஆசிரியர்கள் தாங்கி பிடிப்பார்கள் அதேபோல தமிழ்நாடு அரசு ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றி கொடுப்பார்கள்

ஆசிரியருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உள்ள பந்தத்தை யாராலும் பிரிக்க முடியாது என கூறினார்.

Tags

Next Story