தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா
தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி
தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழாவில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு.
சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியின் 66-வது ஆண்டு விழா வள்ளியப்பா கலை அரங்கில் நடந்தது. கல்லூரி தலைவர் சொ.வள்ளியப்பா தலைமை தாங்கினார். கல்லூரி துணைத்தலைவர்கள் சொக்கு வள்ளியப்பா, தியாகு வள்ளியப்பா ஆகியோர் பேசுகையில், நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மாணவர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றனர். சேலம் ஜே.எஸ்.டபிள்யூ. ஸ்டீல் நிறுவன நிர்வாக துணைத்தலைவர் பிரகாஷ் ராவ் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார். கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் ஆண்டறிக்கை வாசித்தார். அப்போது, உயர்தர கல்வி, சிறந்த செயல் திறனுக்கான என்ஜினீயரிங் எஜிகேஷன் எக்ஸலன்ஸ் விருது பெற்றதையும், பொறியியல், தொழில்நுட்ப துறைகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக உத்தரபிரதேச அரசின் தேசிய விருது பெற்றதையும் குறிப்பிட்டார். தொழில் நிறுவனங்களில் சிறந்து விளங்கும் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர். கல்வியியல் முன்னிலை பெற்ற மாணவ- மாணவிகளுக்கும், பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பிடித்தவர்களுக்கும் துறை வாரியாக பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
Next Story