ராமநாதபுரத்தில் ஆறு வருடத்திற்கு பிறகு சிக்கிய திருடன்

ராமநாதபுரத்தில் ஆறு வருடத்திற்கு பிறகு சிக்கிய திருடன்

ஆறு வருடத்திற்கு பிறகு சிக்கிய திருடன்

பரமக்குடியில் கொள்ளை அடித்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையனை ஆறு வருடத்திற்கு பின் தீரன் திரைப்படப் பாணியில் பிடித்த காவலர்கள்.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த அணிகேட் ராம்பிரோஸ் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு கட்டிட வேலைக்காக வந்துள்ளார். இந்த நிலையில் பரமக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்று தனியாக கிளினிக் நடத்தி வரும் கிருஷ்ணவேணி வீட்டில் தனியாக இருந்ததை நோட்டமிட்டு வீட்டிற்க்குள் புகுந்து கிருஷ்ணவேணியின் கை கால்களை கட்டி போட்டு வீட்டில் இருந்த 37 சவரன் நகை மற்றும் 12 லட்சம் ரூபாய் ரொக்கத்தை திருடி சென்றுள்ளார். இது குறித்து கிருஷ்ணவேணி பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலிசார்கள் திருடனின் கை ரேகைகளை பதிவு செய்து ஆறு ஆண்டுகளுக்கு மேலாக தேடி வந்த நிலையில் ஆதார் கார்டு மூலம் முகவரியை கண்டுபிடித்து சார்பு ஆய்வாளர் வெங்கடேஷ் தலைமையில் ஐந்து காவலர்கள் தீரன் திரைப்படப்பாணியில் பரமக்குடியில் இருந்து ரயில் மூலம் மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்திற்கு 3000 கிலோமீட்டர் கடந்து சென்று ஒரு வாரம் தங்கி பெரும் முயற்சி எடுத்து பதுங்கி இருந்த திருடன் அணிக்கேட் ராம்பிரோஸை சுற்றி வளைத்து பிடித்தனர். அப்பொழுது அவர்களுடைய இந்த உறவினர்கள் காவலர்களை சுற்றி வளைத்தனர். அப்பொழுது அவுரங்கபாத் பகுதி காவலர்கள் உதவியுடன் அங்கிருந்து கார் மூலம் பரமக்குடிக்கு வந்தனர் பின் பரமக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றவாளியை நீதிபதி முன்பு ஆஜர் படுத்திவிட்டு ராமநாதபுரம் சிறைக்கு அழைத்துச் சென்றனர் போலீசாரின் வாகனத்தில் ஏறும்போது திருடன் காலில் விழுந்து கதறி அழுதார்.

Tags

Next Story