செல்வலிங்கேஸ்வரர் கோவில் மூன்றாம் ஆண்டு சிவராத்திரி விழா

செல்வலிங்கேஸ்வரர் கோவில் மூன்றாம் ஆண்டு சிவராத்திரி விழா

சிவராத்திரி

நாமக்கல் மாவட்டம்,வாய்கால்கரையில் உள்ள செல்வலிங்கேஸ்வரர் கோவிலில் நாளை சிவராத்திரி விழா நடைபெற உள்ளது.

மல்லசமுத்திரம் அருகே, அக்கரைப்பட்டி வாய்கால்கரையில் உள்ள, பிரசித்திபெற்ற செல்வநாயகி அம்மன் உடனுறை செல்வலிங்கேஸ்வரர் கோவிலில் 3ம்ஆண்டு மகா சிவராத்திரிவிழா நடக்க இருப்பதையொட்டி, கடந்த 5ம்தேதி மாலை 6மணிக்கு காப்புகட்டுதலுடன் விழா தொடங்கியது. நேற்று மாலை 4மணிக்கு, சுவாமி அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் திருவீதி உலா நடந்தது.

நாளை மாலை 3மணிக்குமேல் தீர்த்தகுடம் அழைத்து ஊர்வலகமாக வந்து கோவிலை அடையும். தொடர்ந்து மாலை 6மணிக்கு முதற்கால யாகபூஜையும், இரவு 9.30மணிக்கு இரண்டாம்கால யாகபூஜையும், இரவு 12மணிக்கு மூன்றாம்கால யாகபூஜையும், அதிகாலை 3மணிக்கு நான்காம்கால யாகபூஜையும் நடைபெறும். 9ம்தேதி அதிகாலை 5.30க்கு சுவாமிக்கு பொங்கல் வைக்கப்படும். தொடர்ந்து, புஷ்பஅலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

Tags

Next Story