அனுமதியின்றி அமைக்கப்பட்ட டிக்கெட் கவுன்டர் - அள்ளி சென்ற பேரூராட்சி ஊழியர்கள்
அகற்றப்பட்ட டிக்கெட் கவுன்டர்
திற்பரப்பு அருவி மற்றும் அதன் சுற்று பகுதிகள் திற்பரப்பு டவுன் பஞ் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதுபோன்று அணை பகுதியில் உள்ள படகு சவாரி, கடையால் டவுன் பஞ் கட்டுப் பாட்டில் உள்ளது. சவாரிக்கான படகு கட்டண வசூல் உரிமம் கடையால் பஞ் ஏலம் மூலம் தனியாருக்கு வழங்கி உள்ளது.இதுபோன்று அருவி நுழைவு கட்டண வசூல், வாகன நிறுத்தும் கட்டண வசூல் உரிமம் உள்ளிட்டவை திற்பரப்பு பஞ் ஏலம் மூலமாக தனி நபர்களுக்கு வழங்கி உள்ளது.
ஏலத்தில் போட்டி போட்டு தொகைக்கு உரிமம் எடுக்கும் நபர்கள், பின்னர் அத்தொகையை வசூல் செய்ய பல்வேறு யுக்திகளை கையாளுவது சுற்றுலா பயணிகளுக்கு பெரும் சிரமத்தை கொடுக்கிறது. சில வருடங்களாக கடையால் பஞ் பகுதியில் உள்ள படகுத்துறை உரிமத்தை போட்டிபோட்டு அதிக தொகைக்கு எடுக்கும் நபர்கள், அருவி நுழைவு பகுதியில் வைத்து, படகு சவாரி டிக்கெட் விற்பனை செய்து வருகின்றனர்.இந்த நிலையில் கடையாலுமூடு பேரூராட்சி பகுதியில் திற்பரப்பு தடுப்பணையில் படகு சவாரி நடக்கும் இடத்தில் டிக்கெட்டுகளை விற்க கவுண்டர் ஒன்றை எந்த வித அனுமதியும் பெறாமல் திற்பரப்பு பேரூராட்சி பகுதியில் குத்தகைதாரர் அமைத்து டிக்கெட் விற்பனை செய்தார். தகவல் அறிந்து திற்பரப்பு பேருராட்சி ஊழியர்கள் டிக்கெட் கவுண்டரை அதிரடியாக அகற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.