லால்குடியில் தாகம் தணிக்கும் தண்ணீர் பந்தலை அதிமுக முன்னாள் எம்பி
தண்ணீர் பந்தல் திறப்பு
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக கழகம் சார்பில் லால்குடியில் உள்ள ஆண்கள் மேல்நிலைபள்ளி அருகில் அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க தாகம் தணிக்கும் கோடைகால தண்ணீர் மற்றும் நீர்மோர் பந்தலை திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும்,
முன்னால் எம்பியுமான ப.குமார் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், சர்பத் மற்றும் பழங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் S.S.விக்னேஷ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் M.அருணகிரி, ஒன்றிய கழக செயலாளர்கள் சூப்பர் TNT.நடேசன், அசோகன்,
மாவட்ட இளைஞர் மற்றும் இளைஞர்கள் பாசறை செயலாளர் VDM.அருண் நேரு, நகர கழக செயலாளர் பொன்னி சேகர், பூவாளூர் பேரூர் கழக செயலாளர் S.ஜெயசீலன், மற்றும் லால்குடிக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.