ஸ்ரீ ராதாகிருஷ்ணன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி தீர்த்த குட ஊர்வலம்
சேலம் சூரமங்கலம் திருவாகவுண்டனூர் மேத்தா நகர் பகுதியில் ஸ்ரீ ராதாகிருஷ்ணன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி தீர்த்த குட ஊர்வலம் நடந்தது.
சேலம் சூரமங்கலம் திருவாகவுண்டனூர் மேத்தா நகர் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ ராதாகிருஷ்ணன் ஸ்ரீ சீனிவாச பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் நூதன ஆலய அஷ்டபந்தன மகா சம்ப்ரோஷன்ன கும்பாபிஷேக விழா 25ந்தேதி நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 15 ஆம் தேதி முகூர்த்த கால் நடுதல் பாலிகை போடுதல் உள்ளிட்ட வைபவம் நடைபெற்று வந்தது. மேலும் ஹோமம் மற்றும் தீர்த்தக்கரை ஊர்வலம் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக காலை 6 மணி அளவில் ஆச்சார்ய வாகனம் குரு வந்தன பிரார்த்தனை தீப லட்சுமி பூஜை, விக்னேச்சர் ஆராதனை பஞ்சகவ்ய பூஜை, ஸ்ரீ விஸ்வக்ஷேனர் ஹோமம், சுதர்சன ஹோமம், லட்சுமி நரசிம்ம ஹோமம் மற்றும் மகா சாந்தி ஹோமம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பல்வேறு வண்ண வாசனை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் பெருமாள் ஆகிய உற்சவ மூர்த்திகளை அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர்த்தி சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பல்வேறு நதியில் இருந்து எடுத்துவரப்பட்ட தீர்த்தக் குடத்தை ஊர்வலமாக எடுத்து வந்தனர். சுவாமி ஊர்வலம் மற்றும் தீர்த்தத்த குட ஊர்வலமானது நெடுஞ்சாலை நகர் பகுதியில் தொடங்கி சோனா கல்லூரி, திருவாக்கவுண்டனூர் வழியாக வந்து மேத்தா நகர் கோவிலை அடைந்தது. மேளதாளம் முழுங்க மங்கள வாத்தியம் இசைக்க அர்ச்சனைகள் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.