ஸ்ரீ ஓங்காளியம்மன் கோவில் தீமிதி விழா முன்னிட்டு தீர்த்த குட ஊர்வலம்

சங்ககிரி அருகே அரசராமணி செட்டிப்பட்டி ஓங்காளியம்மன் தீமிதி விழா முன்னிட்டு தீர்த்த குட ஊர்வலம் நடைபெற்றது.
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணி செட்டிப்பட்டி சரபங்கா நதிக்கரை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஓங்காளியம்மன் கோவில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு சுவாமி காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி மலர்களால் அலங்கரித்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்துக்கொண்டு காவிரி ஆற்றிலிருந்து முக்கிய கிராமங்களின் வழியாக ஓங்காளியம்மன் மேளதாளங்கள் முழங்க கோவிலை வந்தடைந்தது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு ஓங்காளியம்மனை வழிபட்டு சென்றனர்.

Tags

Next Story