தீர்த்த குடம் வீதி உலா நிகழ்ச்சி
வீதி உலா
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தீர்த்த குடம் வீதி உலா நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகே புளியங்குடி ஆவணி அம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழாவானது சிறப்பாக கொண்டாடப்பட்டது. பக்தர்கள் தீர்த்தம் குடம் எடுத்து வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்ற பின்பு அம்மனுக்கு பால், மஞ்சள், சந்தனம், இளநீர், கரும்பு சாறு உள்ளிட்ட திரவியங்கள் கொண்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் அம்மன் சிலையானது அலங்கரிக்கப்பட்ட தேரில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .
Next Story