கரும்பு விவசாயிகள் கேஒய்சி விவரங்களை தெரிவிக்க அறிவுறுத்தல்

கரும்பு விவசாயிகள் கேஒய்சி விவரங்களை தெரிவிக்க அறிவுறுத்தல்

 ஆட்சியர் தீபக் ஜேக்கப் 

திருஆரூரான் சர்க்கரை ஆலையில் கரும்புக்கு நிலுவைத் தொகை பெறாத விவசாயிகள் தங்களது சுயவிவரங்களை (கேஒய்சி)  சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை நலிவடைந்த காரணத்தால் 2018-19 ஆம் ஆண்டு முதல் அரவை நடைபெறாமல் இருந்தது. இதனால் அந்த சர்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய கரும்புத்தொகை நிலுவையில் இருந்தது. விவசாயிகள் சார்பில் கோரப்பட்ட நிலுவைத் தொகையில் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் 2.5.2022 அன்றைய தீர்ப்பின் மூலம் ஒப்புக்கொள்ளப்பட்ட தொகையில் 57.36 சதவீதம் அனுமதிக்கப்பட்ட தொகையாக விவசாயிகளுக்கு வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் 29.96 கோடி ரூபாய் நிலுவைத் தொகை கலைத்தல் அலுவலர் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வங்கி கணக்கு எண் விவரங்கள் பெறப்படாத காரணத்தால் 2.28 கோடி ரூபாய் நிலுவைத் தொகை கலைத்தல் அலுவலர் வசம் உள்ளது. இதுவரை கேஒய்சி விவரங்கள் வழங்காத விவசாயிகள் https://www.tasugars.in//investorinfo.html என்கிற வலைதளத்தில் தமிழ் அல்லது ஆங்கில விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து உடன் விண்ணப்பித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. தவறும் பட்சத்தில், திவால் மற்றும் திவால் சட்டம் 2016 (Insolvency and Bankruptcy Code 2016) சட்டத்தின் கீழ், குறிப்பிடப்பட்டுள்ளபடி மீதம் உள்ள செலுத்தப்படாத தொகை கையாளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

கலைத்தல் அலுவலரின் முகவரி, ராமகிருஷ்ணன் சதாசிவன், IP Reg No: IBBI/IPA-001/IP-P00108/2017-18/10215,கண்காணிப்புக் குழுவின் தலைவர், திருஆரூரான் சுகர்ஸ் லிமிடெட், பழைய எண்: 22, புதிய எண் 28, மேனாட் தெரு, புரசைவாக்கம், சென்னை – 600 007, கைபேசி எண் 94444 55982 மின்னஞ்சல் முகவரி: thiruarooransugarsltd@gmail.com/ sadasivanr@gmail.com என்ற முகவரிக்கு விவசாயிகளின் வங்கி விவரங்களை உடன் அனுப்பி வைத்திட அறிவுறுத்தப்படுகிறார்கள். எனவே (NCLT) தீர்ப்பின்படி 57.36 சதவீதம் அனுமதிக்கப்பட்ட தொகை பெறாத விவசாயிகள், இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு கேஒய்சி விவரங்களை விரைவில் சமர்ப்பித்து உரிய தொகையினை பெற்றுக் கொள்ள வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story