பங்குனி பெருவிழாவை முன்னிட்டு திரு ஆபரண பெட்டி பவனி
கீழக்கன்டணி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீ உஜ்ஜனி மகாகாளியம்மன் திருக்கோவிலில் அம்மனின் திரு ஆபரண பெட்டி பவனி நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம், கீழக்கன்டணி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீ உஜ்ஜனி மகாகாளியம்மன் திருக்கோவிலில் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு அம்மனின் திரு ஆபரண பெட்டி பவனி நடைபெற்றது. இவ்விழா கடந்த இரண்டாம் தேதி அன்று அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. விழாவின் ஒரு நிகழ்வாக திரு ஆபரண பெட்டி பவனி நடந்தன.
முன்னதாக கோவில் பூசாரி கிராம விநாயகர் கோவிலில் இருந்து அம்மனின் திரு ஆபரணங்கள் உள்ள பெட்டியை கூடையில் வைத்து தலையில் சுமந்து பாரம்பரிய வாத்தியங்களுடன், பக்தர்கள் படையை சூழ, கிராமத்தை சுற்றி வலம் வந்தனர். வானவெடிகளுடன் பவனி வந்த திரு ஆபரண பெட்டி கோவிலை மூன்று முறை வலம் வந்து அம்மனுக்கு சமர்ப்பித்து வழிபட்டனர். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபாடு செய்தனர்.