திருச்செங்கோட்டில் தீ விபத்து : 2 தீயணைப்பு வீரர்கள் காயம்

திருச்செங்கோட்டில் தீவிபத்து

தீப்பிடித்து எரிந்த காரால் தீவிபத்து
திருச்செங்கோட்டில் தீப்பிடித்து எரிந்த காரால் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் தீயணைப்பு வீரர்கள் 2 பேர் காயமடைந்தனர்.
திருச்செங்கோடு கைலாசம்பாளையம் சுப்பராயன் நகர் இரண்டாவது தெரு பகுதியில் அண்ணாமலை என்பவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்தது. மளமளவென பரவிய தீயால் அருகில் வாடகைக்கு குடியிருந்த மனோகரன், கதிர்வேல் என்ற இருவர் வீடு உட்பட மூன்று வீடுகள் எரிந்து சேதமடைந்ததோடு, அங்கு நிறுத்தப்பட்டிருந்த டிவிஎஸ் வாகனம் மற்றும் காருக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டரும் வெடித்து சிதறி பெரும் விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்க முயன்ற தீயணைப்பு வீரர்கள் பரத்வாஜ், ஜெகநாதன் ஆகிய இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து, தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். காயம் அடைந்த தீயணைப்பு இவர்கள் இருவரும் திருச்சங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story


