அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் திருஏடு வாசிப்பு திருவிழா

அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் திருஏடு வாசிப்பு திருவிழா

சுவாமி தோப்பில் அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் திருஏடு வாசிப்பு திருவிழா தொடங்கியது


சுவாமி தோப்பில் அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் திருஏடு வாசிப்பு திருவிழா தொடங்கியது

கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் ஆண்டுதோறும் தமிழ் ஆண்டு பங்குனி மாதம் முதல் வெள்ளிக்கிழமை திருவிழா தொடங்கி 17 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று மார்ச் 15 ந் தேதி தொடங்கியது. விழாவுக்கு பால. பிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கி திருஏடு வாசிப்பினை தொடங்கி வைத்தார்.

பேராசிரியர் ஆர். தர்ம ரஜினி முன்னிலை வகித்தார். திருஏட்டினை ஜெயராஜா பழம், தங்கேஸ்வரி மற்றும் சரஸ்வதி ஆகியோர் வாசிக்க நாஞ்சில் பா. ஜீவா விளக்க உரையாற்றுகிறார். தொடர்ந்து அய்யாவுக்கு பணிவிடையும் இரவு தர்மங்களும் நடைபெற்றது. தொடர்ந்து மார்ச் 31ஆம் தேதி வரை தினமும் மாலை 5 மணி முதல் திருஏடு வாசிப்பு நடைபெறுகிறது .

மார்ச் 29ஆம் தேதி அய்யாவிற்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பும் 30-ஆம் தேதி அம்மைமார் கல்யாண திருஏடு வாசிப்பும் மார்ச் 31ஆம் தேதி பட்டாபிஷேக விழா திருஏடு வாசிப்பும் நடைபெறுகிறது. திருவிழாவினை யொட்டி தினமும் அய்யாவுக்கு சிறப்பு பணிவிடைகளும் திருஏடு வாசிப்பும் பின்னர் தர்மங்களும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags

Next Story