சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் திருக்கல்யாண விழா

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் திருக்கல்யாண விழா
சுசீந்திரம் கோவில்
சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் திருக்கல்யாண விழா வரும் 22ஆம் தேதி நடக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் அறம் வளர்த்த நாயகி அம்மனுக்கு சுவாமிக்கும் திருக்கல்யாணம் நடப்பது வழக்கம். இந்த ஆண்டைய திருக்கல்யாண நிகழ்ச்சி வரும் 22ஆம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு கடந்த 15ஆம் தேதி முதல் ஆறம்வளர்த்த நாயகி அம்மன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளி காலை, மாலை திருவீதியுலா, சிறப்பு அலங்கார தீபாரதனை நடந்து வருகிறது. வரும் 22ஆம் தேதி அதிகாலை அறம்வளர்த்த நாயகி அம்மன் மேன தாளங்கள் முழங்க பறக்கையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்று ஆறாட்டு விழா நடக்கிறது.

தொடர்ந்து ஆசிராமம் பகுதியிலுள்ள விநாயகர் கோவிலில் எழுந்தருளி, மணப்பெண் கோலத்தில் அலங்கரிக்கப்பட்டு, அன்று மாலை பெண்ணை அழைத்து வருவது போல மேளதாளங்கள் முழங்க ரத வீதியை சுற்றி பவானியாக கோவில் உட்பிரகாரம் செல்கிறார். பின்னர் சுவாமியை அருகில் அமரச் செய்து புரோகிதர்கள் மந்திரம் ஒலிக்க திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு, வெற்றிலை பாக்கு, சந்தனம், குங்குமம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. மறுநாள் 23ஆம் தேதி மாலை இந்திரன் தேரில் சுவாமி மற்றும் அம்மன் அமர பக்தர்கள் ரதவீதி சுற்றி வரும் தேரோட்டமும் நடக்கிறது.

Tags

Next Story