எடப்பாடி அருகே ஸ்ரீ பழனியாண்டவர் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவ விழா

சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம் வெள்ளரி வெள்ளி கிராமம் கல்லபாளையம் நாச்சிருத்தான் தோட்டம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பழனி ஆண்டவர் ஆலய சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண உற்சவர் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

அதற்கு முன்னதாக சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க யாக பூஜைகள் நடைபெற்று, வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீ சுப்ரமணிய பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்த கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் வள்ளி தெய்வானை முருகனை திருத்தேரில் வைத்து கோயிலை சுற்றி பக்தர்கள் தேரை இழுத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story