விக்கிரவாண்டி முருகன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

விக்கிரவாண்டி முருகன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

 திருக்கல்யாணம்  

விக்கிரவாண்டி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பாரதி நகரில் உள்ள முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. முன்னதாக வள்ளி, தெய்வானை சமேத பால சுப்பிரமணியருக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல் வேறு பொருட்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்து மகா தீபாரா தனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து புதிதாக உற்சவர் சாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன்பிறகு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வள்ளி, தெய்வானை சமேத பாலசுப்பிரமணியருக்கு வைதீக முறைப்படி திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு வாண வேடிக்கைகளுடன் சாமி வீதி உலா வந்தது. விழா ஏற்பாடு களை திருப்பணி குழுவினர் முன்னின்று செய்திருந்தனர்.

Tags

Next Story