ராமலிங்கேஸ்வரருக்கு திருக்கல்யாண உற்சவம்

ராமலிங்கேஸ்வரருக்கு திருக்கல்யாண உற்சவம்

 திருக்கல்யாண உற்சவம்

சித்திரை மாத உத்திர நட்சத்திர தினத்தன்று, பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரருக்கு, திருக்கல்யாண உற்சவம்.
காஞ்சிபுரம் அடுத்த, திம்மராஜம்பேட்டை கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் சித்திரை மாத உத்திர நட்சத்திர தினத்தன்று, பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரருக்கு, திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். நடப்பாண்டின் திருக்கல்யாண உற்சவ வைபவத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணி அளவில் சீயமங்கலம் பேட்டையில் இருந்து, கல்யாண சீர்வரிசை புறப்பட்டு சென்றது. அதைத் தொடர்ந்து, இரவு 8:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவ வைபவம் நடந்தது. மணக்கோலத்துடன் இடப வாகனத்தில் ராமலிங்கேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்."

Tags

Next Story