காசிவிஸ்வநாதசுவாமி திருக்கோயிலில் திருக்கல்யாண திருவிழா
உலகம்மன் உடனாய காசிவிஸ்வநாதசுவாமி
தென்காசி அருள்மிகு உலகம்மன் உடனாய அருள்மிகு காசிவிஸ்வநாதசுவாமி திருக்கோயிலில் திருக்கல்யாண திருவிழா அக்.30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நவ.9 வரை நடைபெறுகிறது. இக்கோயிலில் நடைபெறும் முக்கியத் திருவிழாவான திருக்கல்யாணத் திருவிழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை அதிகாலை 5.10மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து நவ. 7ஆம் தேதி தேரோட்டமும், நவ. 9ஆம் தேதி காலை 8.20 மணிக்கு யானைப்பாலம் தீா்த்தவாரி மண்டபத்துக்கு அம்பாள் தவசுக்கு எழுந்தருளலும் நடைபெறுகிறது. மாலையில் தெற்குமாசி வீதியில் காசிவிஸ்வநாதா்- உலகம்மன் தவசுக் காட்சியும், இரவு திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. விழா நாள்களில் நாள்தோறும் காலை, இரவு அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறும். மாலையில் மண்டகப்படிதாரா்களின் சமய சொற்பொழிவு, மண்டகப்படி தீபாராதனை நடைபெறும். ஏற்பாடுகளைக் கோயில் செயல் அலுவலா் இரா. முருகன் தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.